சுத்து போட்ட 15 தெருநாய்கள்! செருப்பால் அடித்த பெண்மணி ..வைரலாகும் வீடியோ!

Dogs attacked Women in Hythrabad

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள மணிகொண்டா மாவட்டத்தில் சித்ரபுரி மலைப்பகுதியில் காலை நடைபயிற்சி மேற்கொண்ட பெண் ஒருவரை 15 தெரு நாய்கள் தாக்கி இருக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ கட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அந்த பெண்மணியை சுற்றி 15 தெருநாய்கள் தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும், அந்த தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள காலில் கிடந்த செருப்பால் அந்த நாய்களை தாக்குவார்.

இதனால், அந்தப் பெண்ணின் கடுமையான மன உறுதியும் மற்றும் விரைவான சிந்தனையாலும் தான் கடுமையான காயங்களைத் உண்டாகாமல் தடுத்திருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து ANI பத்திரிகைக்கு அந்த பெண்மணி அளித்த பேட்டியில், “அன்று, நான் நடந்து செல்லும் போது, சாலையில் 2 நாய்கள் இருந்தன. நான் அவற்றிலிருந்து விலகிச் சென்றேன்.

ஆனால் அதில் ஒரு நாய் என்னைப் பார்த்து குரைக்க ஆரம்பித்தது, விரைவில் உடனடியாக  நாய் கூட்டம் என்னைத் தாக்க தொடங்கியது. அவைகள் என்னை சூழ்ந்ததால் நான் அந்த நாய்களை பயமுறுத்த முயற்சி செய்தேன்.

அங்கு காரை ஓட்டிச் சென்ற ஒருவரும், ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற மற்றொருவரும் அங்கு வந்த பிறகு நாய்கள் ஓடிவிட்டன. அந்த நேரத்தில் வாட்ச்மேனும் விரைந்து வந்து தாக்குதல் நடத்திய அந்த நாய்களை பயமுறுத்தினார்.

சுமார் 15 நாய்கள் என்னைத் தாக்கின. இதே போல பலர் தெருநாய்களால் தாக்கப்படுகின்றனர்”, என்று கூறி இருந்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் கணவரான பத்ரி இது குறித்து பேசுகையில், “நான் மணிகொண்டா, சித்ராபுரி காலனியில் உள்ள எம்.ஐ.ஜி. பிளாட்ஸில் வசிக்கிறேன். என் மனைவி தினமும் காலை 6 மணிக்கு காலை நடைப்பயிற்சி செல்வார்.

கடந்த ஜூன் 21-ம் தேதி அன்று காலை அவர் நடந்து சென்ற போது நாய்கள் அவரை தாக்கின. என் மனைவி நாய்களை விரட்ட முயன்றார், கடவுளின் அருளால் மட்டுமே காப்பாற்றப்பட்டிருக்கிறார், மேலும், இது அதிகாலையில் நடந்ததால், சுற்றிலும் யாரும் இல்லை.

இந்த நாய்களுக்கு பல நபர்கள் இந்த வளாகத்திற்குள் உணவளிக்கிறார்கள். முன்னதாக, இது குறித்து புகார் எழுப்ப முயன்றபோது, வாக்குவாதம் ஏற்பட்டது, இங்கு சுமார் 40 நாய்கள் உள்ளன. எனக்கு சொந்தமாக 2 நாய்கள் உள்ளது அதை வளர்ப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” , என்று அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்