இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.! 15 பள்ளிகள் அலர்ட் .!
பெங்களூருவில் செயல்பட்டு முக்கிய சுமார் 15 பள்ளிகளில் இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இமெயில் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டலானது கிடைக்கப்பெற்றது. இதனை அடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர், முதற்கட்டமாக அனைத்து பள்ளி மாணவர்களையும் பள்ளிகளில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பிறகு, தற்போது குறிப்பிட்ட பள்ளிகளில் வெடிகுண்டு சோதனையாளார்கள் பள்ளிகளில் அனைத்து இடங்களிலும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 15 தனியார் பள்ளிகளில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரலை.. ஒடிசா அரசு அதிரடி முடிவு!
இதற்கு முன்னதாக , கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி இதே போல வெடிகுண்டு மிரட்டல் பெங்களூரு பள்ளிகளுக்கு வந்தது. இதனை விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என குறிப்பிடப்பட்ட அந்த இமெயில் பின்புறம் தமிழகத்தை சேர்ந்த ஒரு பதின்ம வயது இளைஞர் இருந்தது தெரியவந்தது.
அதே போல தற்போதும் அந்த இமெயில் அனுப்பியது யார் என்ற விவரத்தை கண்டறியவும் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். விரைவில் மிரட்டல் விடுத்த நபர் யார் என்ற விவரம் தெரியவரும் என பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.