மூத்த மருத்துவர்களின் சம்பளத் தொகை 15 சதவீதம் உயர்த்தப்படுவதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
தெலுங்கானாவில் மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு மூத்த மருத்துவர் கூட்டமைப்புடன் இணைந்து இளநிலை மருத்துவர்கள் பணியை புறக்கணிக்க முடிவு செய்தனர். மே 26-ஆம் தேதி கொரோனா தொடர்பான அனைத்து அவசர கால பிரிவுகளுக்கான சிகிச்சையை புறக்கணித்து, மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், நோயாளிகளின் நிலை ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனையடுத்து, மருத்துவர்களின் இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து, மூத்த மருத்துவர்களின் சம்பளத் தொகை 15 சதவீதம் உயர்த்தப்படுவதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஹைதராபாத்தில் மருத்துவ கல்வி இயக்குனர் சார்ந்த பயிற்சி மருத்துவர்களின் சம்பளத்தை மாதத்திற்கு ரூ.70,000-த்திலிருந்து ரூ.80,500 ஆக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…