டெல்லி:வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டிராக்டர் பேரணியை அனுமதித்த நேரத்திற்கு முன்பே தொடங்கியதால் விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகை குண்டு வீசினர். மேலும் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது.
டிராக்டர்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் மீது சவாரி செய்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் செங்கோட்டையின் வளாகத்திற்குள் நுழைந்தனர்.அதன்பின்பு செங்கோட்டையில் உள்ள ஒரு கொடி கம்பத்தில் ஏறி விவசாயிகள் விவசாயக் கொடியை ஏற்றினர்.டெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் டெல்லி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பின் போது தேசிய தலைநகரில் செவ்வாய்க்கிழமை நடந்த வன்முறைகள் தொடர்பாக டெல்லி காவல்துறையினர் மொத்தம் 15 எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.இதில்,கிழக்கு எல்லையில் ஐந்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலா ஒன்று நஜாப்கர், ஹரிதாஸ் நகர் மற்றும் உத்தர நகர் ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளா : கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும்…
சென்னை : இன்று தமிழ்நாடு மாநில சுற்றுசூழல் மற்றும் காலநிலை துறை சார்பில் நடத்தப்படும் காலநிலை மாற்ற உச்சி மாநாடு…
சென்னை : நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான…
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…