உ.பி.யில் கோர விபத்து… 7 குழந்தைகள் உட்பட15 பேர் உயிரிழப்பு!
உத்தரபிரதேச மாநிலத்தில் கஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டர் கவிந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கங்கை நதியில் புனித நீராட பக்தர்களை ஏற்றி சென்று கொண்டிருந்ததாக டிராக்டர் உத்தரபிரதேச மாநிலத்தில் கஸ்கஞ்ச் பகுதியில் உள்ள குளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவம் கஸ்கஞ்சில் உள்ள பாட்டியாலி தரியாவ்கஞ்ச் என்ற சாலையில் காலை 10 மணியளவில் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் இதுவரை 7 குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read More – இதெல்லாம் போலி.. நம்பாதீங்க… தேர்தல் ஆணையம் உடனடி அறிவிப்பு.!
டிராக்டர் கவிந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதி காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு அம்மாநில முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.