கைது செய்யப்பட்ட ரியா சக்ரபொர்த்திக்கு 15 நாள் நீதிமன்ற காவல்.!
சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ரியா சக்ரபொர்த்தியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரண வழக்கினை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த கொலை வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட போதை பொருள் விற்பனையாளர் உட்பட இதற்கு முன்னர் 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தற்போது இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட எட்டாவது நபர் ரியா சக்ரபொர்த்தி ஆவார். அவரது சகோதரர் ஷோயிக், சுஷாந்தின் உதவி தீபேஷ் சாவந்த் மற்றும் வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டா உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ரியா சக்ரபொர்த்தியிடம் வீடியோ கான்பிரன்சிங் மூலம் மாஜிஸ்டிரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். தற்போது அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க விசாரணை போதை பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.