அடேங்கப்பா.! 2 மணி நேரத்தில் 1,49,025 டிக்கெட் முன்பதிவு.!

Default Image

 2 மணி நேரத்தில் 1,49,025 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்  மே 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ளது. இந்நிலையில்,  ஜூன் 1-ம் தேதி முதல் 200 ரயில்கள் முதல் கட்டமாக இயக்கப்பட உள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்  தெரிவித்திருந்தார்.

இந்த ரயிலுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு இன்று காலை 10 மணி முதல் IRCTC மற்றும் செல்போன் செயலி மூலம் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் , 2 மணி நேரத்தில் 1,49,025 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலைய கவுண்டர்களில் 2 அல்லது 3 நாள்களில்  டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்றும்,  நாளை முதல் நாடு முழுவதும் உள்ள 1.7 லட்சம் பொது சேவை மையங்களில் முன்பதிவு தொடங்கும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Joe Root
erode by election 2025
edappadi palanisamy mk stalin
R Ashwin -- Virat kohli
abhishek sharma varun chakravarthy
vidaamuyarchi anirudh