திருநள்ளாற்றில் ஓட்டுக்குத் தங்கம் ! விசாரணை நடத்த நாராயணசாமி வலியுறுத்தல்
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள 149 தங்க காசுகள் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் திருநள்ளார் தொகுதியில் பறக்கும் படையினர் சோதனை செய்தபோது 149 தங்க காசுகள் ரூ.90 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.பறக்கும் படையினர் சோதனை செய்தபோது இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.அவர்கள் காவல்துறையினர் கண்டதும் தாங்கள் வைத்திருந்த பையை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளனர்.
காவல்துறையினர் அதனை சோதனை செய்த பொழுது 5 லட்சம் மதிப்புள்ள தங்க நாணயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது,மேலும் அந்த மர்ம நபர்கள் விட்டுச்சென்று பைக் பறிமுதல் செய்யப்பட்டு தப்பிச்சென்றவர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
தங்க காசு பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக கொடுக்க வைக்கப்பட்டிருந்தா ஏற்கனவே வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுவிட்டதா என்பது குறித்து விசாரிக்க காரைக்கால் தேர்தல் அதிகாரி அர்ஜுன் ஷர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.