இன்று முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் – காவல்துறை அதிரடி
மகாராஷ்டிராவில் பரபரப்பான சூழல் நிலவி வரும் சூழலில், மும்பையில் இன்று முதல் ஜூலை 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ.) கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்த வேளையில்,மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட சிவசேனா எம்எல்ஏக்கள் குஜராத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் முகாமிட்டு போர்க்கொடி தூக்கியுள்ளனர்.இதனிடையே,முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்த்து,தங்களது ஆட்சியை அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வருக்கான அரசு இல்லத்தை முதல்வர் உத்தவ் தாக்கரே காலி செய்துள்ளார்.அதன்படி,மும்பையில் உள்ள வர்ஷா பங்களாவில் இருந்து காலி செய்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தனது சொந்த வீட்டுக்கு திரும்பியுள்ளார்.முதல்வரின் இத்தகைய முடிவு அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் பரபரப்பான சூழல் நிலவி வரும் சூழலில், மும்பையில் இன்று முதல் ஜூலை 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. மேலும், பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள், அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.