144 தடையை மீறினால் கைது – கலெக்டருக்கு கர்நாடக முதல்வர் உத்தரவு!
கொரோனா வைரஸ் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்து மாநிலங்களிலும் தற்போது மிகவும் தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கர்நாடக முதல்வராகிய எடியூரப்பா தற்பொழுது கலெக்டருக்கு ஒரு உத்தரவை போட்டுள்ளார். அதில் மாநிலம் முழுவதும் உள்ள எல்லைகளை மூடிய பின்பு மற்ற மாவட்டத்திற்கும் அல்லது வீடுகளை விட்டு வெளியேற காரணம் இன்றி வருபவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களுக்கான கடையில் அதிக விலை வைத்து விற்பது, தனியார் மருத்துவமனைகள் மற்றும் க்ளினிக்குகளை மூடுவது மற்றும் டாக்டர்கள் காரணமில்லாமல் விடுமுறை எடுப்பது போன்ற செயல்களை அனுமதிக்கக்கூடாது. வீட்டில் உள்ளவர்களுக்கு உரிய முறையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுமார் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதையும் மீறி அரசின் உத்தரவுக்கு எதிராக வெளியில் வருவோரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.