தாஜ்மஹால் உட்பட142 புராதன இடங்களை இலவசமாக பார்க்க மத்திய அரசு அனுமதி..!
நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல அரசியல் கட்சி தலைவர்களும் , பிரபலங்களும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெண்களின் தியாகத்தை போற்றும் வகையில் நாளை நாடு முழுவதும் உள்ள புராதன இடங்களை பெண்கள் இலவசமாக பார்க்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள 142 புராதன இடங்களை இலவசமாக பார்வையிட பெண்களுக்கு முதல் முறையாக மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இலவசமாக பார்வையிடும் புராதன இடங்களில் உலகின் 7-வது அதிசயமான தாஜ்மஹாலும் அடங்கும்.
மற்ற நாட்களில் தாஜ்மகாலை பார்வையிட இந்தியர்களுக்கு தலா ரூ. 50, வெளிநாட்டினர்களுக்கு தலா ரூ. 1,100 கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.