சிக்கித் தவித்த மகனை 1400 கி.மீ ஸ்கூட்டியில் பயணித்து வீட்டிற்கு அழைத்து வந்த வீரத்தாய்.!

Default Image

ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கி தவித்த மகனை, மீட்க 1400 கிலோ மீட்டர் ஸ்கூட்டியில் பயணம் செய்து பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்த தாய்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் கடந்த 24 தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையை தவிர மற்ற யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் பலர் ஊரடங்கில் சிக்கி தவித்தனர். அதனால் திருமணம், இறப்பு, மருத்துவம், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் இருபபவர்கள் போன்ற அவசர தேவைகளுக்கு மட்டும் அனுமதி பெற வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக்கொண்டது.

இதனிடையே பல்வேறு மாநிலங்களில் பணிபுரிவோர் வருமானம் இல்லையென கூறி நடைபயணமாக சொந்த ஊருக்கு திரும்பி சென்றுகொண்டிருக்கின்றன. அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் நிஜாம்பாத்தை சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் மருத்துவ பயிற்சிக்காக ஹைதராபாத் சென்றுள்ளார். ஊரடங்கு உத்தரவால் அவர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அங்கேயே மாற்றிக்கொண்டார். இதனால் மகனை மீட்க முடிவெடுத்த அவரது தாயார் ரஜியா பேகம், போலீசிடம் அனுமதி பெற்று கடிதம் வாங்கிக் கொண்டு ஸ்கூட்டியில் பயணித்தார். சுமார் 1,400 கிலோ மீட்டர் கூட்டிலேயே பயணித்து பல்வேறு சோதனைச்சாடியை கடந்து தன் மகனை பத்திரமாக வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். கணவரை இழந்த ரசியா பேகம் நிஜம்பாத்தில் தலைமை ஆசிரியராக தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்