புதுச்சேரிக்கு மத்திய அரசின் சிறப்பு நிதி ரூ.1,400 கோடி – அமைச்சர் எல்.முருகன்
புதுச்சேரி மாநில மேம்பாட்டுக்காக மத்திய அரசின் சிறப்பு நிதியாக ரூ.1,400 கோடி ஒதுக்கீடு என அமைச்சர் எல் முருகன் பேச்சு.
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய இணையமைச்சர் எல் முருகன், புதுச்சேரிக்கு சிறப்பு நிதியாக ரூ.1,400 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பபுதுச்சேரியில் முதற்கட்டமாக 1,400 பேருக்கு வேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு விமான நிலைய விரிவாக்கத்திற்கு பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. விழுப்புரம் – புதுச்சேரி சாலை அகலப்படுத்தும் பணி ரூ.92 கோடியில் நடைபெற்று வருகிறது. பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்க முதலமைச்சருடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
மேலும், புதுச்சேரியில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. மீனவர்கள் எல்லை தாண்டுவதும் அவர்களை இலங்கை படையினர் கைது செய்வதும் தொடர் கதையாக உள்ளது. கைது செய்யப்படும் மீனவர்களை இலங்கை அரசுடன் பேசி மீட்டு வருகிறோம் என தெரிவித்தார்.