சத்தீஸ்கரை சேர்ந்த 14 வயது பழங்குடி சிறுமி தனது ஆண் நண்பருடன் வெளியே சென்ற போது,4 மர்மநபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் .
சத்தீஸ்கரின் கபிர்தாம் மாவட்டத்தை சேர்ந்த 14வயது பழங்குடி சிறுமி நான்கு மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறி புகார் அளித்ததாக போலீசார் திங்களன்று தெரிவித்தனர் . இச்சம்பவம் காவர்தா நகரத்தின் சிட்டி கோட்வாலி காவல் நிலையத்தின் கீழ் ஞாயிறன்று இரவு நடந்ததாக கூறப்படுகிறது.
அந்த பெண் தனது ஆண் நண்பருடன் வெளியே சென்ற போது,நான்கு பேர் இரண்டு பேரையும் தடுத்து நிறுத்தியதாகவும் ,அதன் பின் அவரது ஆண் நண்பரை அவ்விடத்தை விட்டு செல்ல மிரட்டியதாகவும் சிறுமி புகாரில் கூறியிருந்தார்.அதன்பின் அந்த நால்வரும் சிறுமியை ஆளில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர் . சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதி உள்ளூர்வாசிகள் போலீஸ் ரோந்து குழுவை தொடர்பு கொண்டு உடனடியாக அந்த இடத்தை அடைந்தாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க , குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து சிறுமி அளித்த அடையாளங்களின் பேரில் குற்றவாளிகளை தேடி வருவதாகவும் , சந்தேகத்தின் பேரில் சில நபர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இச்சம்பவத்தை கண்டித்து மாநிலத்தில் கற்பழிப்பு,கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் ,அவற்றை சரிபார்க்க காங்கிரஸ் அரசு தவற விட்டதாகவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் ராஜ்நந்த்கானை சேர்ந்த பாஜக எம்பி சந்தோஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…