உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடாலில் 13 வயது சிறுமியை மூன்று ஆண்கள் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடாலில் 14 வயது சிறுமியை 3 பேர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக வியாழக்கிழமை அன்று போலீசார் தெரிவித்தனர்.கடந்த புதன்கிழமை அன்று மாலை சிறுமியின் பெற்றோர்கள் வேலைக்காக வெளியே சென்ற போது ,தனியாக இருந்த சிறுமியை மூன்று ஆண்கள் கடத்தி காட்டுக்குள் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு மூவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ,இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டி விட்டு சிறுமியை அவ்விடத்திலே விட்டு சென்றுள்ளனர் . அதனையடுத்து மயக்க நிலையில் சிறுமியை அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை கண்டதை தொடர்ந்து இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
அதனையடுத்து பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து பலத்த காயங்களை உடைய சிறுமியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு குற்றம்சாட்டப்பட்ட மூவரும் ஒரே பகுதியில் வசிப்பவர்கள் என்பது தெரியும் என்பதால் ,சிறுமியின் தந்தை மூன்று ஆண்கள் மீதும் போலீசில் புகார் செய்துள்ளார் .இந்த கொடூர சம்பவம் குறித்த விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் நைனிடாலின் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…
சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…
பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…
சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…