பீகார் மாநிலத்தில் தந்தையால் தொடர்ந்து வேலை செய்ய முடியாததால் ஊரடங்கு நேரத்திலும் ரிக்க்ஷாவை ஓட்டி குடும்பத்தை கவனித்து வரும் 14 வயது சிறுமியின் செயல் வியக்க வைக்கிறது.
கொரானா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதுமே அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஆறு மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பீகார் மாநிலம் சசாரம் என்னும் மாவட்டத்தில் தொடர்ந்து இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் சூழலில் தனது தந்தையால் வேலை செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் நந்தினி குமாரி எனும் 14 வயது சிறுமி தானே தனது தந்தையின் வாடகை ரிக்ஷாவை அழுத்தி பயணிகளை ஏற்றி குடும்பத்திற்கு செலவு பணத்தை உழைத்து கொடுக்கிறாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஊரடங்கு நேரத்தில் எனது தந்தையே நான் ரிக்ஷ ஓட்ட அனுமதிக்கவில்லை, ஏனென்றால் காவல் துறையினருக்கு பயமாக உள்ளது, அதனால் தான் அதற்கு பதிலாக நானே அவரது வேலையை ஒரு மாதமாக செய்கிறேன் என அவர் கூறியுள்ளார். மேலும் அவர் தினசரி கூலியாக தற்பொழுது வேலை செய்து வருகிறாராம். 12 மணிநேரம் வேலை செய்வதாகவும், ஒரு நாளில் 100 முதல் 200 ரூபாய் வரை சம்பாதிப்பதாகவும் நந்தினி கூறியுள்ளார்.
படிக்காத பெண் என்றாலும் அனைத்து விதிகளையும் பின்பற்றக்கூடிய கெட்டிக்கார சிறுமியாக இவர் உள்ளாராம். எந்த இடத்துக்கு போக வேண்டும் என்று கூறினாலும் அதன் பாதைகளையும் வழிகளையும் நன்கு அறிந்தவராக இவர் உள்ளாராம். மேலும் ஆண்கள் ஓட்டக்கூடிய ரிக்ஷாவை விடத்தான் ஓட்டக்கூடிய ரிக்ஷாவில் பயணிக்க பெண்கள் அதிகம் விரும்புவதாகவும், அவர்களுடைய தைரியம் மற்றும் மனக் கவலையால் அதிகம் பேர் ஈர்க்கப்பட்டு இவள் ரிக்ஷாவிற்கு தான் வருகிறார்கள் எனவும் அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் கூறியுள்ளனர் .
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…