இமாச்சலப் பிரதேசத்தின் லஹால் ஸ்பிட்டி பகுதியில் உள்ள பனிப்பாறையில் ஏறுவதற்காக சென்றிருந்த 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 14 பேர் சிக்கியுள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள லஹாஸ் ஸ்பிட்டி எனும் பகுதியில் உள்ள பனிப்பாறையில் ஏறுவதற்காக ஒரு குழு கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக சென்றுள்ளது.5000 மீட்டருக்கு மேல் அந்த குழுவினர் மலையில் ஏறியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான வானிலை காரணமாக அவர்கள் முன்னோக்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் சென்ற 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை அடுத்து மலை பகுதியில் சிக்கித் தவிக்க கூடிய 14 பேரையும் மீட்பதற்காக மீட்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறியுள்ள லஹாஸ் ஸ்பிட்டியின் துணை ஆணையர் நீரஜ் குமார் அவர்கள், மலைப் பகுதியில் சிக்கித் தவித்த கூடிய 14 பேரும் விரைவில் காசாவை அடைய வாய்ப்பு உள்ளதாகவும், இன்று மீட்பு குழு தார் சாங்கோ பகுதியில் தங்கியிருப்பார்கள். உயிரிழந்தவர்களின் உடல்கள் கீலாங் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…