தெலுங்கானாவில் வெளுத்து வாங்கிய கனமழை.. 14 பேர் பலி.!
தெலுங்கானா : நகர்கர்னூல், விகாராபாத், காமரெட்டி மற்றும் யாதாத்ரி-புவனகிரி மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் பல பகுதிகளில் நேற்றைய தினம் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசியதில், தனித்தனி இடங்களில் 14 பேர் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தாக கூறப்படுகிறது.
நாகர்கர்னூல் மாவட்டம் தண்டூரில் கட்டுமானப் பணியின் கீழ் இருந்த பால் பண்ணையின் சுவர் இடிந்து விழுந்ததில் 10 வயது சிறுமி உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், நாகர்கர்னூல் மாவட்டத்தின் வெவ்வேறு மண்டலங்களில் மின்னல் மூவர் உயிரிழந்தனர்.
இதனிடையே, சித்திப்பேட்டை மாவட்டம் முலுகு மண்டலத்தில் உள்ள க்ஷிராசாகரில் கோழிப்பண்ணையின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். மேலு, மேட்சல் மாவட்டம் கீசராவில் நடந்த மற்றொரு சம்பவத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மரம் விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.