குஜராத் மாநிலத்தில் வதோதரா பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா அருகே ஹர்னி என்ற ஏரிக்கு சுற்றுலா செல்ல பள்ளி மாணவர்கள் சார்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 27 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் படகில் பயணம் செய்தனர்.
அப்போது திடீரென எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. படகு கவிழ்ந்ததில் 2 ஆசிரியர்கள் 14 மாணவர்கள் உட்பட 16 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படக்குழு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதை மீட்பு படைதுறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மீட்பு பணியில் ஈடுபட்டு படகில் இருந்த 10 மாணவர்கள் பத்திரமாக மீட்கபட்டனர். இருப்பினும் 16 இந்த படகு விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் சாசனத்தை மீறியுள்ளார் பிரதமர் மோடி… காங்கிரஸ் கடும் விமர்சனம்!
இந்த படகு கவிழ்ந்த போது அதில் இருந்த மாணவர்களுக்கு உயிர் காக்கும் கவச உடை கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில்,இந்த படகு விபத்தில் கவிழ்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள் பிரதமர் மோடி, ரூ. 2 லட்சம் நிவாரணமும் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…