இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களில் 14% பேர் இவர்கள் தானாம்
இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களில் 14% பேர் 5-11 வயது உடையவர்கள்.
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே இணையத்தின் பிடியில் தான் சிக்கியுள்ளனர். இன்று சிலரால் இணையம் இல்லாமல் செல்போனை பயன்படுத்துவது என்பது ஒரு கடினமான ஒன்றாகக் கருதுகின்றனர்.
அதிலும், தற்போது கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டிற்குள் முடங்கி கிடைக்கும் மக்கள், அதிகமாக இணையத்தில் தான் உலா வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய இணையம் மற்றும் கைபேசி சங்கம், இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களில், 14% பேர் 5-11 வயது உடையவர்கள் என தெரிவித்துள்ளது. மேலும், இந்தியா முழுவதும் 504 மில்லியன் பயனாளர்கள் தினமும் இணையம் பயன்படுத்துவதாக வும்,அதில் 433 மில்லியன் பயனாளர்கள் 12 வயதுக்கு மேல் உடையவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.