ஆந்திராவில் அதிகாலை நிகழ்ந்த கோர விபத்து.. உடல் நசுங்கி 14 பேர் உயிரிழப்பு..!

ஆந்திராவில் ஏற்பட்ட கோரவிபத்தில் 5 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.
சித்தூரை சேர்ந்த 18 பேர் டெம்போ வேன் மூலம் அஜ்மீர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கர்நூல் மாவட்டம் மாதவரம் அருகே லாரி மற்றும் டெம்போ நேருக்கு நேர் மோதி கோர விபத்து நடந்தது.
இந்த விபத்தில் டெம்போவில் 8 ஆண்கள், ஒரு குழந்தை , 5 பெண்கள் என 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025