உ.பி.யில் 16 மருத்துவர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா ! உயிரைக்காப்பவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை
டி.எம் & சி.எம்.ஓ ஆல் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதால் ராஜினாமா சமர்ப்பிப்பு!
உத்தரபிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தில் சி.எச்.சி மற்றும் பி.எச்.சி-களின் பொறுப்பாளர்களாக பணிபுரியும் பதினான்கு மருத்துவர்கள் நிர்வாக அதிகாரிகளால் மனரீதியான துன்புறுத்தல் குற்றச்சாட்டில் தங்கள் ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளனர்.
ஏனெனில் அவர்கள் அதிகாரிகளால் தண்டனை உத்தரவுகள், அநாகரீகமான நடத்தை மற்றும் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளின் ஒத்துழையாமைக்கு உட்படுத்தப்பட்டனர் இதன்காரணத்தினால் சமுதாய சுகாதார மையங்களின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட 11 மருத்துவர்களும், மாவட்டம் முழுவதும் பல ஆரம்ப சுகாதார மையங்களுக்கு தலைமை தாங்கும் ஐந்து மருத்துவர்களும் தங்களது ராஜினாமாவை உன்னாவோவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அசுதோஷ்குமாரிடம் சமர்ப்பித்தனர்.
மேலும் நிர்வாக அதிகாரிகள் தங்கள் சகாக்கள் மீது எந்த விளக்கமும் விவாதமும் இன்றி தண்டனை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மருத்துவர்கள் குற்றம் சாட்டினர். இதைப்பற்றி சி.எம்.ஓ டாக்டர் அசுதோஷ்குமார் கூறுகையில் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாங்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம், ஆனால் மருத்துவத் துறைக்கு எதிராக இம்மாதிரியான துன்புறுத்தல்கள் மற்றும் தண்டனை உத்தரவுகளை பிறப்பித்து வருவது வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார். இதைப் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.