2023க்குள் 14 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.! பிரதமர் மோடி உறுதி.!
இன்று நடைபெற்ற ரோஸ்கர் மேளாவில், மத்திய ஆயுதப் படைகளால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 51,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி வழங்கினார்.
இதன்பிறகு பேசிய அவர், “2030க்குள் இந்தியப் பொருளாதாரத்திற்கு சுற்றுலாத் துறை ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் பங்களிக்கும் என்றும், இளைஞர்களுக்கு 13-14 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்று கூறினார்.
“அடுத்த பத்தாண்டுகளில் உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும்” என்றார் பிரதமர்.