இந்தியாவில் கொரோனாவால் 13,835 பேர் பாதிப்பு..452 பேர் உயிரிழப்பு.!
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,835 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது.
உலக முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,97,161 ஆகவும், பலி எண்ணிக்கை 1,47,512 ஆகவும் உள்ளது. 5,57,617 பேர் குணமடைந்து உள்ளார்கள். இந்த நிலையில் இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,387 ஆகவும், கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 437 ஆகவும் இருந்தது. கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,749 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.
தற்போதையை நிலவரப்படி நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,835 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,767 பேர் குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,205, டெல்லியில் 1,640, மத்திய பிரதேசம் 1,308, தமிழ்நாடு 1,267, ராஜஸ்தானில் 1,131, குஜராத்தில் 1,021 போன்ற மாநிலங்களில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.