டெல்லி முதல்வரின் சம்பளம் 136% உயர்வு, எம்எல்ஏக்களுக்கு 67% உயர்வு!

Default Image

12 ஆண்டுகளில் முதல் திருத்தத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சம்பளம் பிப்ரவரி 2023 முதல் 136% உயர்வு.

எம்எல்ஏ சம்பளம் உயர்வு:

டெல்லியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 67 சதவீத ஊதிய உயர்வு, கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட சம்பள உயர்வு குறித்த அரசாணையுடன் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இந்த சம்பள உயர்வு 12 ஆண்டுகளுக்கு பிறகு  உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) இதுவரை ரூ.54,000 சம்பளம் பெற்று வந்த நிலையில், 2023 பிப்ரவரி முதல் அவர்களுக்கு மாதம் ரூ.90,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் சம்பளம் உயர்வு:

இதுபோன்று, முதல்வர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், தலைமைக் கொறடா, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் சம்பளம் மற்றும் படிகள் என மொத்தம் மாதம் ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.7 லட்சமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக 12 ஆண்டுகளில் முதல் திருத்தத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சம்பளம் பிப்ரவரி 2023 முதல் 136% உயர்த்தப்பட்டுள்ளது. கடைசியாக டெல்லியில்  2011இல் சம்பளம் தொடர்பான திருத்தம் செய்யப்பட்டது.

5 மசோதாக்கள் நிறைவேற்றம்:

டெல்லி அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை மார்ச் 9ம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் மற்றும் படிகள் உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. கடந்த ஆண்டு, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பிறரின் சம்பளம் மற்றும் படிகளை 67 சதவீதம் உயர்த்துவதற்கான 5 மசோதாக்களை டெல்லி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.

அடிப்படை சம்பளம்:

எம்எல்ஏக்களின் அடிப்படை சம்பளம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், தலைமைக் கொறடா, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, டெல்லியில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும், சம்பளம் மற்றும் அலவன்ஸ் உட்பட மாதம் மொத்தம் ரூ.1.70 லட்சம் பெறுவார்கள்.

மத்திய அரசு நிராகரிப்பு:

டெல்லி எம்எல்ஏக்கள் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஊதிய உயர்வு பெற்றுள்ளனர், கடைசியாக 2011-இல் திருத்தம் செய்யப்பட்டது. இந்த ஊதிய உயர்வு பிப்ரவரி 14 முதல் நடைமுறைக்குவந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.  கடந்த 2015ம் ஆண்டில், ஆம் ஆத்மி அரசு எம்எல்ஏக்களின் சம்பளத்தை மாதம் ஒன்றுக்கு ரூ 2.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஒரு திட்டத்தை அனுப்பியிருந்த நிலையில், அது நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்