பஞ்சாப் முதல்வரின் வேண்டுகோளையும் மீறி 1338 செல்போன் டவர்கள் விவசாயிகளால் சேதம்!

Default Image

பஞ்சாப் முதல்வரின் வேண்டுகோளையும் மீறி 1338 செல்போன் டவர்கள் டெல்லியில் இதுவரை விவசாயிகளால் சேதபடுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசால் பேச்சு வார்த்தைக்கு விவசாயிகள் அழைக்கப்பட்டு பேசினாலும், முழுவதுமாக மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பதையே விவசாயிகள் கோரிக்கையாக வைத்து கொண்டு போராடி வருகிறார்கள்.

இந்த போராட்டத்தில் 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், தங்களுக்கு ஆதரவாக பலர் குரல் எழுப்பினாலும், அம்பானி மற்றும் அதானி போன்ற தொழிலதிபர்களுக்கு தான் இந்த வேளாண் சட்டங்களால் லாபம் உண்டு என கருதும் விவசாயிகள் செல்போன் டவர்களை சேதப்படுத்தி வருகின்றனர். ஜியோ, பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களின் டவர்கள் தான் அதிகளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் சுங்கச்சாவடிகள் விவசாயிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. பஞ்சாபிலும் போராடக்கூடிய விவசாயிகள் பலர், தொலைத்தொடர்பு சாதனங்களை சேதப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் என பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அமரீந்தர் சிங் கேட்டுக்கொண்டிருந்தாலும், விவசாயிகள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இதுவரை 1338 செல் போன் தவர்களை சேதப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்