கடந்த 24 மணி நேரத்தில் 1,334 பேருக்கு கொரோனா.! 27 பேர் உயிரிழப்பு.!

கடந்த 24 மணி நேரத்தில் 1,334 பேருக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, 27 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,334 பேருக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, 27 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15712 ஆகவும், இறப்புகள் 507 ஆகவும் உள்ளன என்றும் கடந்த 28 நாட்களில் புதுச்சேரியின் மஹேயில் மற்றும் கர்நாடகாவின் கோடகுவில் புதிய பாதிப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். மேலும் நாடு முழுவதும் 755 மருத்துவமனைகள் மற்றும் 1,389 பிரத்யேக சுகாதார நிலையங்கள் உள்ளன என கூறியுள்ளார். இதையடுத்து கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025