63 விமானங்களில் 13,300 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்- மத்திய அரசு..!

Default Image

இன்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களிடம் பேசியபோது,  உக்ரைனின் கார்கிவ் நகரில் சிக்கியிருந்த இந்தியர்கள் கிட்டத்தட்ட அனைத்து இந்தியர்களும் மீட்கப்ட்டனர். அதே சமயம் சுமியைப் பற்றிய கவலையும் எங்களுக்கு தொடர்கிறது. சுமியில் வன்முறை தொடர்கிறது. இத்துடன் இங்கு போக்குவரத்து பற்றாக்குறையும் உள்ளது. பிசோச்சினில் இருந்து 298 மாணவர்களை வெளியேற்றியுள்ளோம். சுமி என்பது ரஷ்ய மற்றும் உக்ரேனிய இராணுவங்களுக்கு இடையே கடுமையான சண்டை நடக்கும் மோதல் மண்டலங்களில் ஒன்றாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 15 விமானங்கள் இந்தியாவை வந்தடைந்துள்ளதாகவும், அதில் சுமார் 2900 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுவரை ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் 63 விமானங்களில் சுமார் 13,300 இந்தியர்கள் இந்தியாவை வந்தடைந்துள்ளன. அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் 13 விமான திட்டமிடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 15 விமானங்கள் மூலம் சுமார் 2,900 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

நாளை 2200 இந்தியர்கள் தாயகம் திரும்புவார்கள்: 

நாளை 13 விமானங்கள் மூலம் 2200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்புவார்கள் என  சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று 15 விமானங்கள் மூலம் சுமார் 2,900 இந்தியர்கள் ‘மீட்கப்பட்டுள்ளனர். இதில் 12 சிறப்பு சிவிலியன் மற்றும் மூன்று இந்திய விமானப்படை விமானங்களும் அடங்கும்.

13,300 இந்தியர்கள் பாதுகாப்பாக திரும்பினர்:

 பிப்ரவரி 24 அன்று ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை தொடங்கியதில் இருந்து உக்ரைன் வான்வெளி மூடப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், இந்தியா உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் மீட்டு வருகிறது. இதுவரை சுமார் 13,300 இந்தியர்களை ‘ஆபரேஷன் கங்கா’வின் கீழ் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர்.

உக்ரைனில் இருந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகிய நிறுவனங்கள்  தவிர இந்திய விமானப்படையும் ஈடுபட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்