133 புதிய திட்டங்களை 5 ஆண்டுகளில் கொண்டுவந்துள்ளது -பாஜக தலைவர் அமித்ஷா
133 புதிய திட்டங்களை 5 ஆண்டுகளில் கொண்டுவந்துள்ளது என்று பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தைஎட்டியுள்ளது.இன்றுடன் 7 -ஆம் கட்ட தேர்தலின் பரப்புரை முடிவடைகிறது.வருகின்ற 19-ஆம் தேதி 7 -ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இன்று டெல்லியில் பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பாஜக தலைவர் அமித்ஷாபேசுகையில்,சுதந்திரத்திற்கு பிந்தைய தேர்தலில் பாஜகவிற்கு இதுதான் முக்கியமானது ஆகும்.5 ஆண்டு பாஜக ஆட்சிக்கு இன்று கடைசி நாள், சிறப்பாக பணியாற்றினோம் என்ற மகிழ்ச்சி உள்ளது.
மக்களவை தேர்தலுக்காக வரலாற்றில் இல்லாத அளவுக்கு பாஜக பரப்புரை மேற்கொண்டது. 133 புதிய திட்டங்களை 5 ஆண்டுகளில் கொண்டுவந்துள்ளது .மோடி அரசு ஏழைகள், பெண்கள், விவசாயிகளுக்கு மோடி அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது.
பிரதமர் மோடியின் ஆட்சியில் பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர் மீண்டும் மோடி அரசு அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்ற அலை நாடு முழுவதும் வீசுகிறது.
பாஜக கொண்டு வந்த திட்டங்கள், கொள்கைகள் சமுதாயத்தின் அனைத்து படிநிலையிலும் உள்ள மக்களுக்கு உதவியாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.