இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,32,788 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 3,207 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,83,07,832 ஆக அதிகரித்துள்ளது.
- கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 1,32,788 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். கடந்த 24 ஆம் தேதி முதல் தொற்று எண்ணிக்கை 2 லட்சத்துக்கு கீழ் இறங்கியுள்ளது.
- கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,83,07,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதில் இறப்பு எண்ணிக்கை 3,207ஆக கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது, இதுவரை இந்தியாவில் 3,35,102 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,31,456 பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்ததோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
- இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,61,79,085 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 17,93,645 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாட்டில் இதுவரை 21,85,46,667 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.