“13 வயது சிறுமியின் மார்பகங்கள் வளர்ச்சியடையவில்லை;ஆனால்…” – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் மார்பகங்கள் வளர்ச்சியடையவில்லை என்றாலும்,பாலியல் நோக்கத்துடன் பெண்களின் உடலின் அந்தரங்க பகுதியைத் தொடுவது பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தனிமையில் சிறுமி:
மேற்கு வங்கத்தில் வசிக்கும் 13 வயது சிறுமியின் தாயின் புகாரின் அடிப்படையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.மேற்கு வங்கத்தில் 13 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோதுஅருகில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டில் நுழைந்து தகாத முறையில் சிறுமியை தொட்டதாகவும்,முகத்தில் முத்தமிட்டதாகவும்,மேலும் பாலியல் ரீதியாக தொல்லை தந்ததாகவும் கூறப்படுகிறது.எனினும்,உடனே சிறுமி கூச்சலிட்டதை தொடர்ந்து அந்நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
பாய்ந்த போக்சோ:
அதன்பின்னர்,நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறியதையடுத்து,சம்மந்தப்பட்ட நபர் மீது காவல்நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார்.இதன் காரணமாக,அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.
சிறுமியின் மார்பகங்கள் உருவாகவில்லை:
இந்நிலையில்,இந்த தொடர்பான வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர் மைனர் சிறுமியை தவறாகத் தொட்டு முத்தமிட்டதாகவும்,வழக்கு விசாரணையின் போது, சிறுமியின் மார்பகங்கள் உருவாகவில்லை என வழக்கின் மருத்துவ அதிகாரி சாட்சியம் அளித்ததையடுத்து வழக்கை தள்ளுபடி செய்யுமாறு குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வளர்ந்ததா,இல்லையா முக்கியமற்றது:
இதனை விசாரித்த நீதிபதி பிபேக் சவுத்ரி,”13 வயது சிறுமியின் மார்பகங்கள் வளர்ந்ததா இல்லையா என்பது முற்றிலும் முக்கியமற்றது.ஆனால்,ஒரு குழந்தையின் பிறப்புறுப்பு மற்றும் மார்பகங்களைத் தொடுவது அல்லது பாலியல் நோக்கத்துடன் குழந்தையைத் தொடச் செய்வது பாலியல் வன்கொடுமையின் குற்றமாகும்.
எனவே,உடலுறவு கொள்ளாவிட்டாலும் பெண்ணின் அந்தரங்க பகுதியை தொடுவது பாலியல் வன்கொடுமையின்கீழ் வரும்.மேலும்,போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்திருப்பது சரியே”,என்று தீர்ப்பளித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முதல்.., டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு வரை…
March 1, 2025
உலகமே பார்த்து ஷாக்… டிரம்ப் – ஜெலன்ஸ்கி கடும் மோதல்.! வெள்ளை மாளிகையில் என்னதான் நடந்தது?
March 1, 2025
சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!
March 1, 2025
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025