ராஜஸ்தானில் 13 வயசு சிறுமி அரசு பள்ளி ஆசிரியரால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தின் ஷெர்கர் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியர் ஒருவர் தனது 13 வயது மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுமி மொகம்கர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார்.
இந்த சம்பவம் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்துள்ளது. சிறுமி வயிற்று வலி இருப்பதாக புகார் அளித்து, அவரது பெற்றோரால் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
மருத்துவரின் பரிசோதனைக்குப் பிறகு, தங்கள் மகள் கர்ப்பமாக இருப்பதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், 6 ஆம் வகுப்பு மாணவி தனது நிலைமையின் காரணத்தை தனது பெற்றோரிடம் விவரித்தார், அதைத் தொடர்ந்து பலேசர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோரால் அந்த ஆசிரியர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சுராஜாராம் என்ற ஆசிரியரால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சக ஆசிரியர் சாஹிராம் உதவி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பகிரங்கமாகிவிட்டதால் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் தங்கள் உத்தரவுகளை சிறுமி பின்பற்றாவிட்டால் தேர்வில் தோல்வி அடைய செய்வோம் என்று அச்சுறுத்தியதாகக் ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மற்ற பள்ளி ஆசிரியர்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சரிவர கவனித்துக்கொண்டாலே சிறுமிகளுக்கு நிகழ்த்தப்படும் இம்மாதிரியான கொடுமைகளை தவிர்த்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…