ஹரியானா கொரோனா சிறப்பு சிறைச்சாலையிலிருந்து தப்பித்து ஓடிய 13 கைதிகள்!
ஹரியானாவில் உள்ள கொரோனா சிறப்பு சிறைச்சாலைகளில் உள்ள கம்பியை அறுத்து விட்டு 13 கைதிகள் தப்பித்து ஓடியுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் எந்த ஒரு பகுதியில் உள்ள மக்களும் கொரோனாவிற்கு தப்பித்துவிடவில்லை என்று தான் கூறியாக வேண்டும். இதில் கைதிகள் மட்டும் விதிவிலக்கா என்ன, பல்வேறு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஹரியானாவில் உள்ள கொரோனா சிறப்பு சிறைச்சாலையில் பல்வேறு கைதிகள் அடைக்கப்பட்ட நிலையில் உள்ளனர். மொத்தம் 493 கைதிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஹரியானாவில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 13 கைதிகள் சிறைச்சாலையின் சிறை கம்பியை அறுத்துவட்டு அறுத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். தப்பித்த 13 கைதிகளுமே பாலியல் வன்கொடுமை, கொலை கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலையில் எழுந்து வந்து சிறை அதிகாரிகள் கைதிகளை எண்ணும் பொழுது 13 கைதிகள் குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்த அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் மேல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். தற்போது இந்த கைதிகளை கண்டறிய நான்கு குழுக்கள் இதற்காக அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.