கர்நாடகா : மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் பியாடகி தாலுகாவில் நின்று கொண்டிருந்த டிரக் மீது மினிபஸ் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 2 பேர் காயமடைந்தனர். 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
ஹாவேரி மாவட்டம் குண்டேனஹள்ளி கிராசிங் அருகே அதிகாலை 3.45 மணியளவில் மினி பேருந்தில் 17 பேர் பயணம் செய்தனர். அப்போது, புனித யாத்திரைக்காக பெலகாவி மாவட்டத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில் விபத்து ஏற்பட்டது.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். விபத்துக்கான சரியான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், மினி பஸ்ஸின் டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும், விபத்து குறித்து தெளிவான காரணம் வெளியாகவில்லை என்பதால் கூடுதலாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விபத்தில் பலியானவர்கள் ஷிவமொக்காவை சேர்ந்தவர்கள் என்றும், பெலகாவி மாவட்டத்தில் உள்ள சவதாட்டியில் இருந்து யாத்திரை சென்று யல்லம்மா தேவியை தரிசனம் செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் என்றும் போலீசார் தகவலை தெரிவித்தனர்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…