கர்நாடகாவில் சாலை விபத்து.. ஒரு குழந்தை உட்பட13 பேர் உயிரிழப்பு!
கர்நாடகாவில் சிக்கபல்லபுரம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். சிக்கபல்லபுரம் மாவட்டம் பாகெப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்பறம் கார் மோதி ஒரு குழந்தை, பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற கார் நிறுத்தப்பட்டிருந்த லாரி மோதி விபத்தில் சிக்கியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து 3 வயது குழந்தை, பெண்கள் மற்றும் ஆண்கள் என மொத்தம் 14 பேர் டாட்டா சுமோவில் பெங்களூரு நோக்கி சென்றுக்கொண்டிருந்தன. அப்போது சிக்கபல்லபுரம் மாவட்டம் பாகெப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, முன்னாள் செல்ல கூடிய வாகனங்கள் தெரியாத அளவிற்கு அதிகளவில் பனிமூட்டம் இருந்துள்ளது.
2023 பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 16வது தங்கம்.!
இந்த சமயத்தில் சிமெண்ட் பாகு ஏற்றி வந்த கண்டேனர் லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது டாட்டா சுமோவில் வந்த ஓட்டுநருக்கு பனிமூட்டம் காரணமாக முன்னாடி நிறுத்தப்பட்டிருந்த லாரி தெரியாததால் அதிவேகமாக வந்து லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது 7 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
தற்போது, இந்த விபத்தில் மொத்தம் காரில் சென்ற 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இவர்கள் அனைவரும் பெங்களூரை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. தசரா விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு செல்லும்போது இந்த விபத்தானது நடந்துள்ளது. விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறை உடல்களை மீது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.