கேரளாவின் சாதனை.! 13 லட்சம் மாணவர்களுக்கு நடைபெற்ற தேர்வு.! ஒருவருக்கு கூட கொரோனா இல்லை.!

Published by
murugan

கேரளாவில்  தேர்வு எழுதிய 13 லட்ச மாணவ , மாணவிகளுக்கு  கொரோனா பாதிப்பு இல்லை என கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவில, கடந்த மூன்று  மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த ஊரடங்கு காரணமாக மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தனர். இதனால்,  படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக பல மாநிலங்களில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது. சில மாநிலங்களில்  தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கேரளா மாநிலத்தில் கடந்த மே 26 முதல் மே 30-ம் தேதிவரை 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வில், 13 லட்சம் மாணவ , மாணவிகள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தனது ட்விட்டர்பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில், தேர்வுகள் முடிந்து 14 நாள்கள் முடிந்தநிலையில் 13 லட்சம் மாணவ, மாணவிகள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. அனைத்து வகுப்பறைகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டன.

அனைவருக்கும் மாஸ்க்  கொடுக்கப்பட்டது. கட்டாய தெர்மல் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் , தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறி 14 நாள்கள் பிறகு தெரியும் என்பதால் 14 நாள்களுக்குப் பிறகு இந்த பதிவை பதிவிட்டு உள்ளார்.

 

 

Published by
murugan

Recent Posts

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ.. 

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ..

ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…

15 minutes ago

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

58 minutes ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

1 hour ago

வக்பு வாரிய திருத்த சட்டம் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

2 hours ago

“டெல்லி நாடாளுமன்றமே வக்பு சொத்தா மாறியிருக்கும்” மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

2 hours ago

மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்.! கோவா அணியில் கேப்டன் பதவி?

மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…

2 hours ago