கேரளாவின் சாதனை.! 13 லட்சம் மாணவர்களுக்கு நடைபெற்ற தேர்வு.! ஒருவருக்கு கூட கொரோனா இல்லை.!
கேரளாவில் தேர்வு எழுதிய 13 லட்ச மாணவ , மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவில, கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தனர். இதனால், படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக பல மாநிலங்களில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது. சில மாநிலங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கேரளா மாநிலத்தில் கடந்த மே 26 முதல் மே 30-ம் தேதிவரை 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வில், 13 லட்சம் மாணவ , மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தனது ட்விட்டர்பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில், தேர்வுகள் முடிந்து 14 நாள்கள் முடிந்தநிலையில் 13 லட்சம் மாணவ, மாணவிகள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. அனைத்து வகுப்பறைகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டன.
14 days ago 13 lakh school students completed school final exams in Kerala. Not a single student affected by Covid. It was meticulously planned: schools sanitised. Masks distributed to all. Thermal readings mandatory. Physical distancing ensured. Operation success.#covidkerala
— Thomas Isaac (@drthomasisaac) June 15, 2020
அனைவருக்கும் மாஸ்க் கொடுக்கப்பட்டது. கட்டாய தெர்மல் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் , தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறி 14 நாள்கள் பிறகு தெரியும் என்பதால் 14 நாள்களுக்குப் பிறகு இந்த பதிவை பதிவிட்டு உள்ளார்.