Bomb Threats in 13 airports [Image source : India Today]
Bomb Threats : இந்தியா முழுக்க13 விமான நிலையங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஜெய்ப்பூர், பீகார் , ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 13 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து நேற்று மாலை 3 மணி அளவில் மிரட்டல் செய்தி வந்துள்ளது. இ-மெயில் மூலமாக மத்திய பாதுகாப்பு படையினருக்கு (CSIF) இந்த மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து லக்னோவில் உள்ள சவுத்ரி சரண்சிங் சர்வதேச விமான நிலையம் (உ.பி), போபால் விமான நிலையம் (உ.பி), பாட்னா விமான நிலையம் (பீகார்), ஜம்மு காஷ்மீர் விமான நிலையம், ஜெய்ப்பூர் விமான நிலையம் (ராஜஸ்தான்), டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் மற்றும் டெல்லியில் உள்ள 10 மருத்துவமனைகள் என பல்வேறு பகுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்ததால் வெடிகுண்டு நிபுணர்கள் அனைத்து பகுதிகளிலும் நேற்று மாலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
விமான நிலையங்களில் தீவிர வெடிகுண்டு சோதனை உட்பட பயனாளிகளையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தனர். தற்போது வரையில் மிரட்டல் விடுத்தபடி வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், இது வெறும் மிரட்டல் செய்தி மட்டுமே என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த மிரட்டல் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…