13 விமான நிலையங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.! 

Bomb Threats in 13 airports

Bomb Threats : இந்தியா முழுக்க13 விமான நிலையங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஜெய்ப்பூர், பீகார் , ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 13 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து நேற்று மாலை 3 மணி அளவில் மிரட்டல் செய்தி வந்துள்ளது. இ-மெயில் மூலமாக மத்திய பாதுகாப்பு படையினருக்கு (CSIF)  இந்த மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து லக்னோவில் உள்ள சவுத்ரி சரண்சிங் சர்வதேச விமான நிலையம் (உ.பி), போபால் விமான நிலையம் (உ.பி),  பாட்னா விமான நிலையம் (பீகார்), ஜம்மு காஷ்மீர் விமான நிலையம், ஜெய்ப்பூர் விமான நிலையம் (ராஜஸ்தான்), டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் மற்றும் டெல்லியில் உள்ள 10 மருத்துவமனைகள் என பல்வேறு பகுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்ததால் வெடிகுண்டு நிபுணர்கள் அனைத்து பகுதிகளிலும் நேற்று மாலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

விமான நிலையங்களில் தீவிர வெடிகுண்டு சோதனை உட்பட பயனாளிகளையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தனர். தற்போது வரையில் மிரட்டல் விடுத்தபடி வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், இது வெறும் மிரட்டல் செய்தி மட்டுமே என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த மிரட்டல் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்