நெகிழ்ச்சி வீடியோ…காலில் விழுந்த 125 வயது சிவானந்தா – உடனே பிரதமர் செய்த காரியம்!

குடியரசு தின விழாவை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் கலை, மருத்துவம்,சமூகப்பணி,அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில்,இலக்கியம் மற்றும் கல்வி,விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.
பத்ம விருதுகள்:
அதன்படி,நடப்பு ஆண்டில் மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.அதில் 4 பேருக்கு பத்மவிபூஷண் விருது,17 பேருக்கு பத்ம பூஷண் விருது,107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
விருதுகள் வழங்கிய குடியரசுத்தலைவர்:
இதனைத் தொடர்ந்து,தலைநகர் டெல்லியில் நேற்று ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் 2 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 54 பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். அதன்படி,காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்,சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனர் சைரஸ் பூனாவாலா உள்ளிட்ட பலரும் பத்ம விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
வணங்கிய பிரதமர்:
இந்நிலையில்,125 வயதான யோகா குருவான சுவாமி சிவானந்தாவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருதை வழங்கினார். விருதுக்கு முன்னதாக,விழா நடைபெறும் அரங்கிற்கு வந்த சுவாமி சிவானந்தா அவர்கள் அங்கிருந்த அனைவரையும் வணங்கிய நிலையில் பிரதமர் மோடி அமர்ந்த இடத்துக்கு சென்று அவரையும் தரையில் விழுந்து வணங்கினார்.
பின்னர்,பிரதமர் மோடி அவர்களும்,சிவானந்தாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பதிலுக்கு தலை குனிந்து வணங்கினார்.இச்செயல் விழா அரங்கில் இருந்தவர்கள் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
#WATCH Swami Sivananda receives Padma Shri award from President Ram Nath Kovind, for his contribution in the field of Yoga. pic.twitter.com/fMcClzmNye
— ANI (@ANI) March 21, 2022
இதனிடையே,தமிழகத்தில் இருந்து ஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியம் – இலக்கியம் மற்றும் கல்வி (பத்ம ஸ்ரீ), ஸ்ரீ எஸ் பல்லேஷ் பஜந்த்ரி – கலை (பத்ம ஸ்ரீ),ஸ்ரீமதி ஆர் முத்துகண்ணம்மாள் – கலை (பத்ம ஸ்ரீ), ஸ்ரீ ஏ கே சி நடராஜன் – கலை (பத்ம ஸ்ரீ விருதுகள்) ஆகியோர் விருதுகள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!
February 23, 2025
தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!
February 23, 2025
இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!
February 23, 2025
AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!
February 22, 2025
மீண்டும் மீண்டுமா? அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்!
February 22, 2025