ஒடிசா ரயில் விபத்து : இன்றும் 125 ரயில்கள் ரத்து.!
ஒடிசா ரயில் விபத்து காரணமாக 125 ரயில்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கோரமாண்டல் எக்ஸ்பிரஸ், ஹாவுரா எக்ஸ்பிரஸ் , சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 270க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர விபத்து காரணமாக, அப்பகுதியில் செல்லும் பல்வேறு ரயில்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமை இரவு முதல் அப்பகுதியில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இன்றும் அப்பகுதி வழியாக செல்லும் 125 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று இரவு தான் விபத்து நடந்து 51 மணிநேரம் கழித்து, பாதைகள் சீரமைக்கப்பட்டு சரக்கு ரயிலானது விபத்து நடந்த ரயில் பாதையில் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.