பிரதமர் மோடி வெளியிட்ட 125 ரூபாய் சிறப்பு நாணயம்…!எதற்காக தெரியுமா?..!
பிரதமர் நரேந்திர மோடி,காணொலி மூலம் 125 ரூபாய் சிறப்பு நாணயத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி 125 ரூபாய் சிறப்பு நாணயத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து,பிரதமர் கூறுகையில்:
“நேற்று கிருஷ்ண ஜெயந்தி, இன்று நாம் ஸ்ரீல பிரபுபாதரின் 125 வது பிறந்த நாளை கொண்டாடுகிறோம்.இதனால், மகிழ்ச்சியும் மனநிறைவும் ஒன்றாக கலப்பது போல் உள்ளது.
இந்த உணர்வு இன்று ஸ்ரீல பிரபுபாத சுவாமியின் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களாலும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான கிருஷ்ண பக்தர்களாலும் உணரப்படுகிறது.பிரபுபாத ஸ்வாமி கிருஷ்ணரின் அமானுஷ்ய பக்தர் மட்டுமல்ல, அவர் பாரதத்தின் சிறந்த பக்தரும் ஆவார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அவர் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார்.மேலும்,அவர் ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவாக ஸ்காட்டிஷ் கல்லூரியில் இருந்து டிப்ளமோ படிக்க மறுத்துவிட்டார்”,என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாஜி, “கிருஷ்ணா இயக்கம்” என்று பொதுவாக அறியப்படும் இஸ்கான் (கிருஷ்ண உணர்வுக்கான சர்வதேச சங்கத்தை) நிறுவினார்.இந்த சங்கம் ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் இதர வேத இலக்கியங்களை 89 மொழிகளில் மொழி பெயர்த்து, வேத இலக்கியத்தை உலகம் முழுவதும் பரப்புவதில் சிறப்பான பங்கை வகிக்கிறது.
மேலும்,சுவாமி பிரபுபாதாஜி நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களை நிறுவி, பல புத்தகங்களை எழுதி, பக்தி யோகாவின் பாதையை உலகிற்கு கற்பித்தார்.மேலும்,இவரது நூல்கள் உலக பாடசாலைகள் பலவற்றில் மேற்படிப்புக்கான பாடப் புத்தகங்களாக வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்,அவரது 125 வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி 125 ரூபாய் சிறப்பு நாணயத்தை இன்று வெளியிட்டுள்ளார்.
PM Narendra Modi releases a special commemorative coin of Rs 125 on the occasion of the 125th birth anniversary of Srila Bhaktivedanta Swami Prabhupada, via video conferencing pic.twitter.com/l5qME4GKPh
— ANI (@ANI) September 1, 2021