உத்திரபிரதேச அதிசய மாமரத்தில் 121 வகை மாம்பழங்கள்..!

Default Image

உத்திரபிரதேசத்தில் அதிசய மாமரம் ஒன்றில் 121 வகையான மாம்பழங்கள் காய்த்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

முகலாய மன்னர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் பாரசீகத்திலிருந்து பல வகையான மாமரங்களை கொண்டு வந்து வளர்த்துள்ளனர். தற்போது உத்திரபிரதேசத்தில் சகரான்பூர், கம்பெனி தோட்டம் என்ற இடத்தில் பத்து வருடங்களுக்கு முன்னர் 121 வகை மாமரங்களை ஒன்றாக இணைத்து நட்டு வைத்துள்ளனர். இதில் தற்போது 121 வகையான மாம்பழங்கள் காய்த்துள்ளது அங்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மரக்கன்றுகளை உத்திரபிரதேச வேளாண் பயிற்சி இணை இயக்குனர் ராஜேஷ் பிரசாத்தால் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர் தசேரி, லங்கடா, சவுசா, ராம்கீலா, அமர்பாலி, சஹரான்பூர் அருண், சகரான்பூர் வருண், எல்.ஆர்.ஸ்பெஷல், ஆலம்பூர் போன்ற 121 வகை மாமரக்கன்றுகளை நட்டுள்ளார். இந்த அதிசய மரத்தில் காய்த்துள்ள 121 வகை மாம்பழங்களை அருகில் இருக்கும் மக்கள் ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்