Hadhras accident [file image]
உத்தரபிரதேசம் : ஹத்ராஸில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வு வீடு திரும்புகையில், கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதில் பெரும்பாலும் பெண்கள் தான், 31 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேரை உபி போலீசார் கைது செய்தனர். கைதான 6 பேரில் நிகழ்வின் அமைப்பாளரும் ஒருவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தலைமறைவாக உள்ள 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தேவ்பிரகாஷ் மதுகர் என்பவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ. 1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அலகாபாத உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பலியான அனைவரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மாஜிஸ்திரேட் கூறியுள்ளார். அதன்படி, 21 உடல்கள் ஆக்ராவுக்கும், 28 எட்டாவுக்கும், 34 ஹத்ராஸுக்கும், 38 அலிகாருக்கும் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…