Categories: இந்தியா

சத்தீஸ்கரில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு 12000 ரூபாய் – பாஜக தேர்தல் வாக்குறுதி வெளியீடு!

Published by
பாலா கலியமூர்த்தி

அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக இந்தாண்டு சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதியும் சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பிரதான அர்ஷுயல் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக, வேட்பாளர் பட்டியல், தேர்தல் வாக்குறுதி, பிரச்சாரம் உள்ளிட்டவையில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளது. இந்த நிலையில், “மோடியின் வாக்குறுதிகள்” என்ற பெயரில் பாஜகவின் சத்தீஸ்கர் மாநில தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டது. அதாவது, சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 கட்டங்களாக நவம்பர் 7 மற்றும் 17ம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

20 தொகுதிகளுக்கு நவ.7ம் தேதியும், மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு நவ.17ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் 24,109 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு, 2.03 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். காங்கிரஸ் ஆட்சி செய்யும்  சத்தீஸ்கர் மாநிலத்தை மீண்டும் பாஜக வசம் கொண்டு வர அக்கட்சி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிசூடு: நடவடிக்கை எடுக்காதது ஏன்? – தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

அந்தவகையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது “மோடியின் வாக்குறுதிகள்” என்ற பெயரில் பாஜகவின் சத்தீஸ்கர் மாநில தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டது. அதில், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் இரண்டு ஆண்டுக்குள் ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

மேலும், 6 லட்சம் பேருக்கு மற்ற வழிகளில் வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும். சத்தீஸ்கரில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு 12000 ரூபாய் வழங்கப்படும். சத்தீஸ்கர் மாநிலத்தின் ஏழை மக்கள் ராம ஜன்ம பூமிக்கு பயணம் செய்ய ராம்லல்லா யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும் என  சத்தீஸ்கர் மாநிலத்திற்கான தேர்தல் அறிக்கையில் பாஜக உறுதியளித்துள்ளது. மேலும், மோடியின் வார்த்தையை நம்புங்கள் மக்களே என வாக்குறுதிகளை பிரபலப்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் இல்லை!” புது கண்டிஷன் போட்ட இஸ்ரேல் பிரதமர்!

டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…

20 minutes ago

“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…

13 hours ago

தமிழகத்தில் நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

14 hours ago

“பா.ஜ.க.வின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும்”..முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…

15 hours ago

“அதை பற்றி நம்ம பேசவேண்டும்”…லீக்கான ரோஹித் – அஜித் அகர்கர் கலந்துரையாடல்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…

15 hours ago

ஆளுநரை நான் விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிடாதீர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…

15 hours ago