சத்தீஸ்கரில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு 12000 ரூபாய் – பாஜக தேர்தல் வாக்குறுதி வெளியீடு!
அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக இந்தாண்டு சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதியும் சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பிரதான அர்ஷுயல் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக, வேட்பாளர் பட்டியல், தேர்தல் வாக்குறுதி, பிரச்சாரம் உள்ளிட்டவையில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளது. இந்த நிலையில், “மோடியின் வாக்குறுதிகள்” என்ற பெயரில் பாஜகவின் சத்தீஸ்கர் மாநில தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டது. அதாவது, சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 கட்டங்களாக நவம்பர் 7 மற்றும் 17ம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
20 தொகுதிகளுக்கு நவ.7ம் தேதியும், மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு நவ.17ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் 24,109 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு, 2.03 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். காங்கிரஸ் ஆட்சி செய்யும் சத்தீஸ்கர் மாநிலத்தை மீண்டும் பாஜக வசம் கொண்டு வர அக்கட்சி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிசூடு: நடவடிக்கை எடுக்காதது ஏன்? – தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!
அந்தவகையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது “மோடியின் வாக்குறுதிகள்” என்ற பெயரில் பாஜகவின் சத்தீஸ்கர் மாநில தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டது. அதில், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் இரண்டு ஆண்டுக்குள் ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
மேலும், 6 லட்சம் பேருக்கு மற்ற வழிகளில் வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும். சத்தீஸ்கரில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு 12000 ரூபாய் வழங்கப்படும். சத்தீஸ்கர் மாநிலத்தின் ஏழை மக்கள் ராம ஜன்ம பூமிக்கு பயணம் செய்ய ராம்லல்லா யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும் என சத்தீஸ்கர் மாநிலத்திற்கான தேர்தல் அறிக்கையில் பாஜக உறுதியளித்துள்ளது. மேலும், மோடியின் வார்த்தையை நம்புங்கள் மக்களே என வாக்குறுதிகளை பிரபலப்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.