ரிசர்வ் வங்கி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் 11 ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கு மேலான டெபாசிட் தொகை கேட்பாராற்று இருப்பதாக தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 64 வங்கிகளில், 3 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த, சுமார் 11 ஆயிரத்து 302 கோடி ரூபாய் பணம் கேட்பாராற்று இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ.யில் 1,262 கோடி ரூபாயும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1,250 கோடி ரூபாயும் கேட்பாராற்று இருப்பது தெரியவந்துள்ளது.
எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேசனல் வங்கி தவிர இதர பொதுத்துறை வங்கிகளில் சுமார் 7 ஆயிரத்து 40 கோடி ரூபாய் இவ்வாறு இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதேபோல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் 476 கோடி ரூபாயும், கோட்டக் மஹிந்திரா வங்கியில் 151 கோடி ரூபாயும் என ஆக்சிஸ், டி.சி.பி.(DCB), இண்டஸ் இந்த் (IndusInd), யெஸ் பேங்க் உள்பட 12 தனியார் வங்கிகளில் மொத்தம் ஆயிரத்து 416 கோடி ரூபாயும் கேட்பாரற்று இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. உள்நாட்டு வங்கிக் கிளைகளில் மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள சுமார் 25 வெளிநாட்டு வங்கிக் கிளைகளிலும் 332 கோடி ரூபாய்க்கும் மேலான தொகையை யாரும் கேட்காமல், இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இவை பெரும்பாலும், உயிரிழந்த வாடிக்கையாளர்களின் தொகையாக இருக்கலாம் எனவும், குறிப்பிட்ட அளவு தொகை பினாமி கணக்குகளாக இருக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளாக ஒரு வங்கிக் கணக்கில் பணப்பரிமாற்றம் நடைபெறவில்லை என்றால், அந்த கணக்கு முடக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
12,000 crore untrained banks!
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…