வங்கிகளில் பராமரிப்பின்றி இருக்கும் 12,000 கோடி ரூபாய்.!ஊழல் பணமா?

Default Image

ரிசர்வ் வங்கி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் 11 ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கு மேலான டெபாசிட் தொகை கேட்பாராற்று இருப்பதாக   தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 64 வங்கிகளில், 3 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த, சுமார் 11 ஆயிரத்து 302 கோடி ரூபாய் பணம் கேட்பாராற்று இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ.யில் 1,262 கோடி ரூபாயும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1,250 கோடி ரூபாயும் கேட்பாராற்று இருப்பது தெரியவந்துள்ளது.

எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேசனல் வங்கி தவிர இதர பொதுத்துறை வங்கிகளில் சுமார் 7 ஆயிரத்து 40 கோடி ரூபாய் இவ்வாறு இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதேபோல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் 476 கோடி ரூபாயும், கோட்டக் மஹிந்திரா வங்கியில் 151 கோடி ரூபாயும் என ஆக்சிஸ், டி.சி.பி.(DCB), இண்டஸ் இந்த் (IndusInd), யெஸ் பேங்க் உள்பட 12 தனியார் வங்கிகளில் மொத்தம் ஆயிரத்து 416 கோடி ரூபாயும் கேட்பாரற்று இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. உள்நாட்டு வங்கிக் கிளைகளில் மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள சுமார் 25 வெளிநாட்டு வங்கிக் கிளைகளிலும் 332 கோடி ரூபாய்க்கும் மேலான தொகையை யாரும் கேட்காமல், இருப்பதாகவும்  ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இவை பெரும்பாலும், உயிரிழந்த வாடிக்கையாளர்களின் தொகையாக இருக்கலாம் எனவும், குறிப்பிட்ட அளவு தொகை பினாமி கணக்குகளாக இருக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளாக ஒரு வங்கிக் கணக்கில் பணப்பரிமாற்றம் நடைபெறவில்லை என்றால், அந்த கணக்கு முடக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

 

12,000 crore untrained banks!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்