10 கி.மீ நடந்து சென்று தந்தைக்கு எதிராக புகாரளித்த 12 வயது சிறுமி!

Default Image

ஒடிசாவில் சட்டவிரோதமாக தனது பணம் மற்றும் அரிசியை எடுப்பதால், 10 கி.மீ நடந்து சென்று தந்தைக்கு எதிராக புகாரளித்த 12 வயது சிறுமி.

கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த மார்ச் மாதம் முதலே இந்தியாவிலும் பரவ ஆரம்பித்ததால், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்பொழுது வரை பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் முதல் பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டதால் சத்துணவை நம்பி இருக்கக்கூடிய மாணவர்கள் உணவிற்கு அல்லல்படுவதை அறிந்த இந்திய அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களை ஒவ்வொரு மாநிலங்களிலும் மாணவர்களுக்கு செய்து வருகிறது. இந்நிலையில் ஒடிசாவில் குழந்தைகளின் நலனுக்காக அம்மாநிலத்தின் அரசும் நாள்தோறும் ஒவ்வொரு மாணவர்களின் வங்கி கணக்கில் ரூபாய் 8, அவர்களுக்கு 150 கிராம் அரிசியும் தினமும் வழங்கி வருகிறது.

ஒடிசாவில் 12 வயது சிறுமி ஒருவர் கேந்திரபாவில் வசித்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இவரது தாய் இறந்துவிட்டார். அதன்பின் அவர் தந்தை மறுமணம் செய்து கொண்டதால் தனது மாமா வீட்டில் அவர் வளர்ந்து வருகிறார். சிறுமிக்கு அரசு மூலமாக கொடுக்கக்படக்கூடிய 8 ரூபாய் மற்றும் 150 கிராம் அரிசியை சிறுமியின் தந்தை சட்டவிரோதமாக தானே எடுத்துக் கொள்வதாகவும் அந்த மாணவி பத்து கிலோமீட்டர் நடந்து சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார்.

சிறுமியின் புகாரை ஏற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக சிறுமிக்கு வந்து சேர வேண்டிய பணத்தை அவளது வங்கி கணக்குக்கு அனுப்பும்படி பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். மேலும் இனி அவளுக்கு சேர வேண்டிய அரசி சிறுமிக்கு தான் நேரடியாக கொடுக்கப்படவண்டும் எனவும் ஆணையிட்டுள்ளார். தந்தைக்கு எதிராக 10 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று புகார் அளித்த 12 வயது சிறுமியை மாவட்ட ஆட்சியர் மற்றும் அங்குள்ள அனைவரும் பாராட்டியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்