மத்திய பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுமி மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விடிஷா எனும் மாவட்டத்தில் உள்ள காட்டு பகுதியில் உள்ள மரம் ஒன்றில் நேற்று 12 வயது சிறுமி ஒருவர் துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் இந்தப் பெண்ணின் கைகளும் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என சிறுமியின் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விநாயக் வர்மா அவர்கள் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் தனது தாயுடன் காலை 11 மணியளவில் காட்டு பகுதிக்கு சென்றதாகவும், ஆனால் தனது மகள் தன்னைப் பின் தொடர்ந்து வந்தது தாய்க்கே தெரியாவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் சிறுமியின் தாய் வீடு திரும்பியதும் தனது மகளை காணவில்லை என்று அக்கம்பக்கத்தினரிடம் கூறியதும் அருகிலிருந்த கிராமத்தினர் அனைவரும் சிறுமியை தேடத் தொடங்கி உள்ளனர்.
அதன் பின்பு தான் இந்த சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மரத்தில் தொங்கிய நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததால் யாரேனும் பலாத்காரம் செய்து இருக்கக்கூடும் என கிராமத்தினர் சந்தேகித்து ஒரு இளைஞரை காண்பித்ததாகவும், அந்த இளைஞரிடம் விசாரித்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை கூறி வந்ததால், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் அதிகாரி கூறியுள்ளார். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும், பிரேத பரிசோதனை முடிவுகளை வைத்து தான் உண்மையை கண்டறிய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…